தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

தமிழில் நிறைய படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் கொட்டாச்சி. தற்போது சாயா, பொட்டு, ரோஸ்கார்டன், ராஜமாளிகை, பேய் இருக்கா இல்லையா என படங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி கொட்டாச்சி கூறுகையில், படங்களில் காமெடியனாக நடித்தபோதும், அதை பயன்படுத்தி ஏதேனும் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால் அது இதற்கு முன்பு நிறைவேறாதபோதும், தற்போது நடித்துள்ள சாயா படத்தில் நிறைவேறியிருக்கிறது. இந்த படத்தில் குடிகாரனாக நான் நடித்திருக்கிறேன். ஆனால் குடித்தால்தான் நான் தெளிவாக இருப்பேன். புத்திசாலியாக பேசுவேன். அந்த வகையில், குடித்து விட்டால் உண்மையை மட்டுமே பேசும் நான், இந்த படத்தில் காமெடியாக சில கருத்துக்களையும் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில், எனக்கு மனதளவில் இந்த படம் திருப்தி கொடுத்துள்ளது.
மேலும், நான் சின்ன பையனாக இருந்தபோது மலையாளத்தில் சித்திக் இயக்கிய ஹிட்லர் படத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது சத்யன் அத்திக்காடு இயக்கத்தில் துல்கர்சல்மான் நடித்துள்ள ஜென்முண்ட சிவசோத்திரம் என்றொரு படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் படம் முழுக்க துல்கர்சல்மானுடன் வரும் வேடம். அந்த வகையில், எங்களுக்கிடையே காமெடி காட்சிகள் உள்ளது. அதனால் இந்த படம் எனக்கு மலையாளத்தில் நல்லதொரு என்ட்ரியாக அமை யும் என்று கூறும் கொட்டாச்சி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் தயாராகும் பெயரிடப்படாத ஒரு படத்தில் 4 லீடு நடிகர்களில் தானும் ஒருவராக நடிப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் அடிவாங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாத வேடத்தில் நடிக்கும் அவர், பாடி பில்டர் கெட்டப்பில் நடிக் கிறாராம்.