சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ப்ரியா ஆனந்த் இப்போது பிரியா ரகுராம் ஆக மாறியுள்ளார். அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதாக இல்லைதான்.. அதற்காக பெயரை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நியூமராலஜியின் பிடியில் சிக்கிவிட்டாரோ என நினைத்துவிட வேண்டாம்.. நிச்சயமாக திருமணம் ஆகும் வரை தனது பெயருடன் தந்தையின் பெயரை இணைத்து வைத்திருக்கவே விரும்புகிறார். அப்படி என்றால் யார் இந்த ரகுராம் என்கிற கேள்வி எழத்தானே செய்யும்..
இந்தப்பெயர் பிரியா ஆனந்த் தற்போது மலையாளம், தமிழ் என இருமொழியலில் நடித்துவரும் 'எஸ்றா' என்கிற படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரின் பெயராம். படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ். முதல்முறையாக பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கிறார் என்பதுடன் மலையாளத்திலும் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தான் காலடி எடுத்து வைத்துள்ளார் பிரியா அனந்த். இன்னொரு முக்கியமான விஷயம் இது நூறு சதவீதம் திகிலுக்கு கியாரண்டி தரும் அக்மார்க் ஹாரர் படம்.. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசரும் அதை உறுதி செய்துள்ளது.