ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
பொதுவாக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பர படம் எடுப்பார்கள், அல்லது பிரச்சார படம் எடுப்பார்கள். ஆனால் அரசு திட்டத்தை பிரச்சாரம் செய்ய ஒரு திரைப்படமே எடுக்கப்பட்டது.
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பெண் சிசுக்கள் கள்ளிப்பால் ஊற்றி கொல்லப்படுவதை தடுக்க தொட்டில் குழந்தை என்ற திட்டம் துவக்கப்பட்டது. குழந்தை பெற்றவர்கள் அந்த குழந்தை வேண்டாம் என்றால் அதை கொல்லாமல் அரசு அமைத்திருக்கும் தொட்டிலில் போட்டுவிட்டால் அதனை அரசாங்கமே எடுத்து வளர்க்கும் என்பது அந்த திட்டம்.
இந்த திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்த விரும்பிய அமைச்சர் ஒருவர் தனது நெருங்கிய நண்பரான எஸ்.பி.முத்துராமனிடம் தொட்டில் குழந்தை திட்டத்தை கதை கருவாக கொண்டு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது திரைப்படம் இயக்குவதை நிறுத்தி விட்டு எஸ்.பி.முத்துராமன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நீண்ட நாள் நண்பர் ரகுபதிக்காக மீண்டும் படம் இயக்க முடிவு செய்தார்.
தொட்டில் குழந்தையை மையப்படுத்தி பஞ்சு அருணாசலம் கதை எழுதினார். பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருபெண் குழந்தை அரசு தொட்டிலில் போடப்படுகிறது. அந்த குழந்தை அரசின் பராமரிப்பில் வளர்ந்து ஒரு போலீஸ் அதிகாரியாக மாறி எப்படி இந்த சமுதாயத்துக்கு தொண்டாற்றுகிறது என்பதுதான் கதை.
தொட்டில் குழந்தை ராணியாக ரஞ்சிதா நடித்தார். ஹீரோவாகவும் ரஞ்சிதாவின் காதலனாகவும், மாவட்ட கலெக்டராகவும் ராம்கி நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் தொல்லை கொடுக்கும் வில்லன்களாக ஆனந்தராஜும், கரணும் நடித்திருந்தார்கள். ஆதித்யன் இசை அமைத்திருந்தார், டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மீனா மூவீஸ் சார்பில் வா.வடுகநாதனும், வலம்புரி முத்துவும் இணைந்து தயாரித்திருந்தார்கள். 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றிபெறவில்லை. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கடைசி படமும் இது தான்.