தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' |
படத்தின் தலைப்பையே ஒரு குறியீடாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் ஷாம் நடிக்கும் புதிய படத்திற்கு. ஆறு என்ற எண் வடிவிலான எரியும் மெழுகுவர்த்திதான் அந்த படத்தின் தலைப்பு. இந்த தலைப்பின் அருகே ஆறு மெழுகுவர்த்திகள் அல்லது சிக்ஸ் கேன்டில்ஸ் என்ற எந்த சப் டைடிலும் இடம்பெறாதாம். உலக சினிமாவில் படத்தின் தலைப்பை குறியீடாக கொடுத்தது இதுதான் முதல் முறை என்ற பெருமையுடன் உருவாகும் இப்படத்தில், ஆறு வருடங்கள், ஆறு மாதங்கள், ஆறு வாரங்கள், ஆறு நாட்கள், ஆறு மணிநேரம், ஆறு நிமிடம், ஆறு நொடி என்று அனைத்தும் ஆறில் நடப்பது போல இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆறு மேட்டரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இதில் ஷாம் ஆறு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். தமிழகத்தில் துவங்கும் கதை ஆந்திரா, மகராஷ்ட்ரா, போபால், டில்லி, கோவா, கான்பூர் என்று பயணித்து இறுதியாக கோல்கட்டாவில் முடிகிறது. இந்த மாநிலங்களில் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலும் அந்த அந்த மாநில நாடக கலைஞர்களையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம். பல சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறா£ ஜெயமோகன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக ஷாம், 25 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.