கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அறிமுக இயக்குனர் சுதிர் இயக்கி வரும் படம் திட்டம்போட்டு திருடுற கூட்டம். இதில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் நடந்து வருகிறது. இந்த அருங்காட்சியகத்தை காண வந்த தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜான்டி ரோட்ஸ், திட்டம்போட்டு திருடுற கூட்டம் படப்பிடிப்பையும் பார்த்து ரசித்தார். ஒரு தமிழ் சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதையும் கேட்டு அறிந்தார். படப்பிடிப்பு குழுவினருக்கு தனது பாராட்டினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் ஜெ.கே மஹேந்திரா. இவர் ரஞ்சி கோப்பை அணி வீரர் மற்றும் இந்தியாவின் ஜுனியர் பிரிவில் விளையாடியவர், ஜான்டி ரோட்ஸின் வருகை குறித்து அவர் கூறியதாவது: அடிப்படையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரரான எனக்கு, கிரிக்கெட் தான் உலகம். அந்த கிரிக்கெட் விளையாட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் நான் ஆரம்பித்த இந்த கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு ஜான்டி ரோட்ஸ் வருகை தந்தது, எங்கள் ஒட்டுமொத்த திட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்படி ஒரு தமிழ் திரைப்படம் உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்கின்ற ஆர்வத்தை கொண்டவர் ஜான்டி ரோட்ஸ். அவர் எங்களின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு எங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது, உண்மையாகவே பெருமையாக இருக்கிறது." என்றார்.