தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீராம். அதன் பிறகு சில படங்களில் பள்ளி மாணவராக நடித்தார். கோலிசோடா, வஜ்ரம் பாபநாசம் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஸ்ரீராம், 'பைசா' என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆரா என்ற புதுமுகம் நடிக்கிறர். இவர்கள் தவிர நாசர், மதுசூதனன், மயில்சாமி, செண்ட்ராயன் ஆகியோர் நடிக்கிறார்கள். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜே.வி.இசை அமைக்கிறார். கராத்தே கே.ஆனந்த் தயாரிக்கிறார்.
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கி உள்ளார். “ பணம்தான் இன்று வாழ்க்கையில் முக்கியமாகிவிட்டது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. இது நாளைய சமுதாயத்தை எங்கே கொண்டு நிறுத்தும் என்கிற கவலையை பேசுகிற படம். கோலி சோடா, காக்கா முட்டை பாணியிலான யதார்த்த சினிமாவாக பைசா உருவாக்கி உள்ளது” என்கிறார் இயக்குனர் மஜீத்.