முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
தமிழ் சினிமாவுக்கு என்றால் நோ, தெலுங்கு சினிமா என்றால் யெஸ் சொல்லும் பெரும்பாலான நடிகைகள் போலவே தமன்னாவும் மாறி விட்டார். தெலுங்கு சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்டி நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் காட்டுத் தீ போல பரவிக் கிடப்பது பற்றி அறிந்த தமன்னா, ரொம்பவே கொதித்து போயிருக்கிறாராம்.
நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லீங்க. தமிழ் ரசிகர்கள்தான் எனக்கு வாழ்வு கொடுத்தவங்க. அதனால பாரபட்சமெல்லாம் காட்டவே மாட்டேன், என்று அடித்துச் சொல்லும் தமன்னா, தெலுங்கில் தொடர்ந்து 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் தமிழில் அதிக படங்களை கமிட் பண்ண முடியவில்லை. பொதுவாகவே நான் டைரக்டர் என்ன சொல்கிறாரோ... அதன்படிதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எந்த மாதிரி காஸ்ட்யூம் கொடுத்தாலும் அதனை ஏற்று, அதனை அணிந்து நடிக்கிறேன். தமிழில் என் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்கிறேன். தெலுங்கில் பாடல் காட்சிகளில் கொஞ்சம் கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். அதனால் அப்படி நடிக்கிறேன். அதுமாதிரி தமிழிலும் கிளாமர் தேவையென்றால் அப்படி நடிக்க நான் ரெடியாகவே இருக்கிறேன், என்கிறார் தடாலடியாக! அப்போ சரிதான்!!