ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி | மகனுக்காக படம் தயாரிக்காதீர்கள் : தயாரிப்பாளர்களுக்கு பேரரசு வேண்டுகோள் | 12 படங்களில் நடித்தும் ஒரே ஒரு படம் தான் வெளியாகி உள்ளது : புதுமுக நடிகை வருத்தம் | பிளாஷ்பேக் : எதிர்ப்புகளால் மாற்றப்பட்ட ரஜினி படத்தலைப்பு | பிளாஷ்பேக் : டி.எஸ்.பாலையா ஹீரோவாக நடித்த 'சண்பகவல்லி' | பஹல்காம் தாக்குதல்: நடிகர் அஜித் கண்டனம் | அப்பாவுக்கு பத்மஸ்ரீ, மகனுக்கு பத்மபூஷன் | நிறைவுக்கு வரும் 'குட் பேட் அக்லி' ஓட்டம் | அக்டோபரில் 'பாகுபலி' ரீரிலீஸ் |
தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு டாப் இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர்கள் ஒரு சிலர்தான். ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தனித் தன்மை உண்டு என்றாலும் அவர்கள் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அவர்களில் மணிரத்னம், ஷங்கர், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், வெற்றி மாறன் என இன்னும் சிலரையும் உதாணரமாகச் சொல்லலாம்.
மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தவர்களில் தற்போதைக்கு ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் 'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா. வெற்றி மாறன் உதவியாளர் ரவி அரசு 'ஈட்டி' வெற்றிப் படத்தை இயக்கினார். மற்ற இயக்குனர்களின் உதவியாளர்களை விட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய சிலர் தற்போதைக்கு முத்திரை பதித்து வருகிறார்கள். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கூட சில நாட்களாக சில மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருந்தன.
அதர்வா நடித்து கடந்த வாரம் வெளியான 'கணிதன்' படத்தை இயக்கி டி.என்.சந்தோஷ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர். 'அரிமா நம்பி' படத்தை இயக்கி தற்போது விக்ரம், நயன்தாரா நடிக்கும் 'இரு முகன்' படத்தை இயக்கி வரும் ஆனந்த் சங்கர், 'மான் கராத்தே' சமீபத்தில் வெளிவந்த 'கெத்து' படத்தை இயக்கிய திருக்குமரன், கடந்த ஆண்டு வெளிவந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, 'எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன்' ஆகிய படங்களை இயக்கிவரும் தற்போது கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் 'சக்கர வியூகா' படத்தை இயக்கி வரும் சரவணன் ஆகிய அனைவருமே ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள். இவர்கள் அனைவருமே வித்தியாசமான கதைகளாலும், அதைப் படமாக்கிய விதத்தாலும் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.