அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'புதிய நியமம்' படம், சினிமா ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. காரணம் 'த்ரிஷ்யம்' படத்திற்கு பிறகு மூன்று வருடம் கழித்து வெளியாகியுள்ள பேமிலி த்ரில்லர் என கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். படம் பார்த்தபோது அது உண்மைதான் என தோன்றியது. இரண்டும் வேறு வேறு கதைக்களம் என்றாலும் கூட, படம் பார்த்துவிட்டு நிதானமாக வீட்டுக்கு வந்து யோசித்து பார்த்தால் 'த்ரிஷ்யம்' படத்திற்கும் 'புதிய நியமம்' படத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள் இருப்பதை உணரத்தான் முடிகிறது.
1.குடும்ப பின்னணி
இரண்டு படங்களிலுமே அமைதியான குடும்பம். அலட்டல் இல்லாத கணவன்- மனைவி, அன்பான குழந்தைகள், ஒரு பிரச்சனையில் சிக்கும் வரை நதிபோல சீராக ஓடிக்கொண்டு இருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை என குடும்ப பின்னணி கிட்டத்தட்ட ஒரே விதமாகவே எடுத்தாளப்பட்டு இருக்கிறது.
2. குற்றம் செய்யாத நாயகர்கள்
'த்ரிஷ்யம்' மோகன்லால் எந்த வம்பு தும்புக்கும் போகாத மனிதர். தனது மனைவி மகளுக்கு ஏற்படும் எதிர்பாராத சிக்கலுக்கு தங்கள் குடும்பத்திற்கு பாதகம் வராத வகையில் தீர்வு காண்பார். இதில் லாயராக மம்முட்டியும் எந்த வம்புக்கும் போகாத, தன்னிடம் விவாகரத்துக்கு வரும் தம்பதிகளைக்கூட சுமூகமாக பேசி சேர்த்து வைக்கும் கதாபாத்திரம் தான். ஆனால் தனது மனைவியான நயன்தாரா ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது, அதை முள்ளில் பட்ட சேலையை லாவகமாக எடுப்பதுபோல கவனமாக கையாள்கிறார்.
3. ஹீரோவின் அண்டர்பிளே
இரண்டு படங்களிலும் கதாநாயகர்களின் பத்திரங்களும் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல், சாதாரண மனிதராக வந்துபோவதை போலத்தான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.. ஆனால் இருவருமே தங்களது குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அண்டர்பிளே செய்திருப்பார்கள். இரண்டு படங்களிலுமே தங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்களை காப்பாற்ற தான் செய்தது என்ன என்கிற உண்மை தெரியாமலேயே பார்த்துக்கொள்வார்கள்.
4. ஆயுதங்களுக்கு பதிலாக மூளையை உபயோகப்படுத்தும் 'மைண்ட் கேம்'
'த்ரிஷ்யம்' படத்தில் குடும்பத்திற்கு ஏற்பட்ட சிக்கலை தீர்க்க ஆக்சனும் ஆயுதமும் எடுக்கலாம் என்கிற சூழல் இருந்தும் கூட, அதைவிடுத்து 'மைண்ட் கேம்' என்கிற முறையில் நுண்ணறிவை பயன்படுத்தி சிக்கலில் இருந்து தங்களது குடும்பத்தை பாதுகாப்பார் மோகன்லால். இதில் மம்முட்டியின் பங்கும் கிட்டத்தட்ட அதே தான். இரண்டுபேருமே சட்டத்திற்கு புறம்பாக அதேசமயம் நீதியை நிலைநாட்டவே இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சர்யம்.
5. மொபைல் போன்
த்ரிஷ்யம் படத்தில் கதைப்படி, போலீஸ் விசாரணையில் தடங்கலை ஏற்படுத்தி, விசாரணையின் போக்கை திசைதிருப்பும் வேலையை செய்திருப்பதில் மொபைல் போனின் பங்கு முக்கியமானது. இதிலும் அதேபோல மொபைல் போன் வேறொரு விதத்தில் டெக்னாலஜிக்காக கதையின் முக்கிய பாத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
6. கலப்பு காதல் திருமணம்
'த்ரிஷ்யம்' படத்தில் கிறித்துவரான மோகன்லால் (ஜார்ஜ்குட்டி) இந்துவான மீனாவை (ராணி) திருமணம் செய்து மாமனார் குடும்பத்துடனும் சுமூகமான உறவை வளர்த்திருப்பார்.. அதேபோல 'புதிய நியமம்' படத்திலும் கிறித்துவரான மம்முட்டி (லூயிஸ் போத்தன்), தமிழ் இந்துவான நயன்தாராவை (வாசுகி ஐயர்) காதல் திருமணம் செய்திருப்பார். இதனால் ஏற்பட்ட மனத்தாங்கலில் நயன்தாராவுடன் ஒட்டாமல் இருக்கும் மம்முட்டியின் தாயார் பின் தனது மருமகளுடன் இணக்கமாகிறார்.
7. மிடுக்கான பெண் போலீஸ் அதிகாரி
'த்ரிஷ்யம்' படத்தில் மிக முக்கியமாக ஆதிக்கம் செலுத்திய, கதையுடன் இணைந்து பயணித்த இன்னொரு கதாபாத்திரம் மிடுக்கான பெண் போலீஸ் அதிகாரியான கீதா பிரபாகர் (ஆஷா சரத்). கதையின் த்ரில்லிங்கிற்கு இவரது விசாரணை மிக முக்கியமாக அமைந்தது.. 'புதிய நியமம்' படத்திலும் இதேபோல ஜீனா பாய் (ஷீலு ஆப்ரஹாம்) என்கிற போலீஸ் கமிஷனர் கதாபாத்திரம் கதையின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.
8. சினிமா ஆர்வமுள்ள நாயகர்கள்
'த்ரிஷ்யம் படத்தில் கேபிள் டிவி ஆபரேட்டராக நடித்த மோகன்லால் திரைப்படங்கள் பார்ப்பதை தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு வேலையாகவே வைத்திருப்பார்.. அதிலிருந்துதான் பிரச்சனைக்கான தீர்வுகளையும் கண்டுபிடிப்பார். 'புதிய நியமம்' படத்தில் மம்முட்டியும் சினிமா ஆர்வமுள்ள நபராக நடித்திருக்கிறார். அதனால் தான் லாயராக பணிபுரிந்தபோதும் கூட, சேனல் ஒன்றில் திரை விமர்சனம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணியாற்றுவார் மம்முட்டி.
9. வில்லன்
'த்ரிஷ்யம்' படத்தில் வில்லன் என்று பார்த்தால் அமைதியாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் திடீரென நுழையும் மாணவன் கதாபாத்திரம் தான். இவன் இப்படிப்பட்டவன் என்பதை அவனது பெற்றோரே அறிந்திருக்க மாட்டார்கள்.. 'புதிய நியமம்' படத்திலும் இதேபோன்ற மம்முட்டி குடும்பத்திற்கு அருகிலேயே அவர்களுக்கு பழக்கப்பட்ட, அதேசமயம் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தான் வில்லன்களாக உருக்கொள்கின்றனர். இவர்களது உண்மையான சொரூபம் இவர்களது குடும்பத்திற்கு கூட தெரியாது என்பதும் அதிசயமான ஒற்றுமை.
10. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
'த்ரிஷ்யம்' படத்தில் பதைபதைப்புடன் த்ரில்லிங்கை அனுபவித்து படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்ளுக்கு அந்த கடைசி 5 நிமிட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் 'அட' என்று கைதட்ட வைத்து. இதிலும் அதேபோல 5 நிமிடத்திற்கும் கொஞ்சம் அதிகாமன க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உங்களால் பாராட்டமல், வியக்காமல் இருக்கவே முடியாது.\
உங்களுக்கும் இதுபோல் தோன்றுகிறதா என்பதை ஒருமுறை படத்தை பார்த்து உறுதிசெய்துகொள்ளுங்கள்.