காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இளையராஜாவின் 1000-வது படமான 'தாரை தப்பட்டை' படத்தின் இசை வெளியான 25ம் தேதியன்றே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள 'கெத்து' திரைப்படத்தின் இசையும் வெளியானது. 2015ல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படம் மட்டுமே ஓரளவிற்கு வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ஓரிரு பாடல்கள் மட்டுமே ஹிட்டாகின. அதற்கடுத்து வெளிவந்த 'அனேகன்' படத்தில் 'டங்கா மாரி' பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதன் பின் வந்த 'நண்பேன்டா' படத்தின் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. 2014-ல் இவருடைய இசையில் வெளிவந்த 'இது கதிர்வேலன் காதல், யான்' ஆகிய படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தது.
இரு தினங்களுக்கு முன் இசை வெளியீடு நடந்த 'கெத்து' படம் வரும் பொங்கலன்று வெளிவர உள்ளது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய பெயரை நிலைநிறுத்த ஹாரிஸ் முயற்சி செய்துள்ளார். வழக்கம் போலவே தன்னுடைய டிரேட் மார்க்காக 'தேன் காற்று...' என்ற மெலடிப் பாடலை வைத்துள்ளார். இப்பாடல் 'கஜினி'யின் 'சுட்டும் விழிச் சுடரே...' அளவிற்கு இருக்கும் என படத்தின் இயக்குனரிடம் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 'தில்லு முல்லு...' என்ற பாடலை பத்மாவதி, சீர்காழி சிற்பி, கானா வினோத் மூன்று பாடலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். இப்பாடல் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பைப் பெறலாம். 'முட்ட பஜ்ஜி...' என்ற கானா பாடலும் படத்தில் உள்ளது. 'டங்கா மாரி...' பாட்டைப் போலவே வேண்டும் என படத்தின் இணை தயாரிப்பாளர் வற்புறுத்தலால் இந்தப் பாடல் சேர்க்கப்பட்டதாம். 'எவன்டா இவன்..' என்ற ராப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 'அடியே அடியே...' என்ற வேகமான டூயட் பாடல் ஒன்றும் உள்ளது.
2016ன் துவக்கத்திலேயே 'கெத்து' படம் வெளிவர இருப்பதால் இந்தப் படம் ஹாரிஸுக்கு மீண்டும் ஒரு திருப்பு முனையைத் தருமா என்று அவருடைய ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.