ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
ஐந்து வருடங்களுக்கு முன் மலையாளத்தில் திலீப்பை வைத்து 'மேரிக்குண்டொரு குஞ்சாடு' படத்தை இயக்கிய ஷபி இப்போது மீண்டும் திலீப்பை வைத்து இயக்கியுள்ள படம் தான் 'கனடியன் தருவு'. திலீப்பிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 'பாசஞ்சர்', 'மை பாஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மம்தா தவிர இன்னொரு ஹீரோயினாக நமீதா பிரமோத்தும் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் திலீப்புடன் இவர் ஜோடி சேரும் நான்காவது படம் இது. இவர்களுடன் முகேஷ், லேனா, சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் மகரந்த் தேஷ்பாண்டே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் பெரும்பகுதி கனடாவில் நடந்துள்ளது. அதனாலேயே படத்திற்கு முதலில் 'கனடியன் தருவு' என பெயர் வைத்த இயக்குனர் ஷபி, தற்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை '2 கண்டரீஸ்' என பெயரை மாற்றியுள்ளார். சரி அதென்ன 'மஜா இயக்குனர் என்று கேட்கிறீர்களா..? மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'தொம்மனும் மக்களும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை எடுத்து, அதை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு, விக்ரமை வைத்து 'மஜா'வாக மாற்றி பிளாப் கொடுத்தாரே அவர் தான் இயக்குனர் ஷபி.