ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தமிழ் சினிமாவில் எப்படி நாசரும், பிரகாஷ்ராஜும் தவிர்க்க முடியாத வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களாக இருக்கிறார்களோ, அதேபோல மலையாள சினிமாவில் முக்கியமான நடிகர் தான் சாய்குமார். சில வருடங்களுக்கு முன்பு, சரத்குமார் நடித்த 'அரசு' படத்தில் வில்லனாக தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். மோகன்லால் அறிமுகமான காலகட்டத்திலேயே அறிமுகமான, 53 வயதான இவருடைய விவாகரத்து மனுவைத்தான் கொல்லம் குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து உததரவிட்டுள்ளது.
தனது மனைவி பிரசன்ன குமாரியை விட்டு 2009லேயே பிரிந்துவிட்ட சாய்குமார், மலையாள சினிமாவின் குணச்சித்தர நடிகையான பிந்து பணிக்கரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். விஜய் நடித்த 'லவ் டுடே' படத்தில் சுவலட்சுமியின் அம்மாவாக நடித்தாரே அவர்தான். இப்போது நான்கு வருடங்கள் கழித்து தனது முதல் மனைவியை விவாகரத்து செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார் சாய்குமார் .