ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
புதுயுகம் தொலைக்காட்சியும், நடிகை ராதிகாவின் ராடன் டி.வியும் இணைந்து நடிகவேளின் ராஜபாட்டை என்ற நாடக போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகத்தை இன்றைய நாடக நடிகர்கள் நடித்து காட்டினார்கள். இதில் சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நடந்த விழாவில் நடத்தப்பட்டது.
இதில் முதன் மூன்று சிறந்த நாடகங்களை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீப்ரியா, ராதிகா, கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். முதல் நாடகத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம்பெற்ற நாடகத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், முன்றாவது இடம் பெற்ற நாடகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.