ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பிரபல தெலுங்கு நடிகை கவிதா. சில தமிழ் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார். "அரசியலில் குதித்ததால் அம்மா வேடம்கூட யாரும் தருவதில்லை" என்று மனம் நொந்து கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்பி அழைத்ததால் அரசியலுக்குச் சென்றேன். சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்குவதாக கூறினார். அவரது பேச்சை நம்பி அரசியலில் குதித்தேன். ஆனால் சந்திரபாபு நாயுடு எனக்கு வாக்களித்தபடி எந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. என்றாலும் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ்தான் பணியாற்றி வருகிறேன். இனியும் பணியாற்றுவேன்.