ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் இயக்குநர் ராஜமௌலி சிரஞ்சீவி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் தான் நடிகரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவிக்காக ஆட்டோ ஜானி என்ற பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாகவே ராஜமௌலி சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்ததாகக் கூறப்படுகின்றது.