மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான UK செந்தில்குமார். 50க்கும் மேற்ப்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வாரம் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் வெளியாகியுள்ள 'சகலகலா வல்லவன்'(அப்பாடக்கர்) படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சர்வதேச அரசியல் நோக்கரும், இங்லாந்தின் லேபர் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளருமான லான்ஸ் ப்ரைஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அதன் தாக்கத்தை பற்றியும் 'தி மோடி எஃபெக்ட்' (The Modi Effect) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பிரதமர் மோடியின் 3D ஹோலோக்ராபிக் தொழில்நுட்பம் மூலம் நடத்திய பிரச்சாரத்தில் பங்காற்றியதிற்காக தன் பெயரும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதால் பெருமகிழ்ச்சியில் உள்ளார் ஒளிப்பதிவாளர் UK செந்தில் குமார்.
3D ஹோல்க்ராஃபிக் ஒளிப்பதிவு முறையை லண்டனில் பிரத்யேகமாக பயின்ற ஒரே ஆசிய ஒளிப்பதிவாளர் UK செந்தில் குமார் தான் என்பதுக் குறிப்பிட தக்கது. இந்த தொழில் நுட்பத்தை எப்படி வெகு ஜன மக்களை சென்றடைய வைப்பது என்றக் குழப்பம் எனக்கு இருக்க தான் செய்தது. 2012 குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது இந்தப் பிரசாரத்துக்கு கிடைத்த அமோக வரவேற்ப்பு என் சந்தேகத்தை நீக்கி எனக்கு மேலும் உத்வேகத்தை தந்தது.
“இதை தொடர்ந்து 2014 பொது தேர்தலின் போது 3D ஹோலோக்ராபிக் முறையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. எல்லா 3D ஹோலோக்ராபிக் வீடியோக்களை நானே ஒளிப்பதிவு செய்தேன். ஓரே சமயத்தில் வெவ்வேறு இடத்திலிருக்கும் பல்லாயிரக் கணக்காண வாக்காளர்களை ஸ்ரீ மோடியின் பிரச்சாரம் சென்றடைய இத்தொழில்நுட்பம் இன்றியமைததாய் இருந்தது.
“ஒரு நாளுக்கு 5மணி நேரங்கள் இந்த விடியோ பதிவு நடைப்பெறும். அவரது பேச்சாற்றல் ஹிந்தி மொழி தெரியாத என்னையே கவரும் வகையில் இருந்தது. மிகவும் எளிமையானவர் மோடி, என் நீண்ட முடியைக் கண்டு என்னை 'ஹிப்பி' என்று அழைக்க ஆரம்பித்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதற்கு பிறகு பலரும் என்னை அவ்வாறே அழைப்பதும் எனக்கு பெருமையே.. ஒரு மாதம் முழுதும் இப்பணி தொடர்ந்தது அவரிடம் கற்றுக் கொள்ளக் கிடைத்தது ஏராளம், குறிப்பாக நேரம் தவறாமை மற்றும் ஞாபக சக்தி. எதை செய்தாலும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கிற நம் பிரதமர் மோடி போன்ற ஒரு உன்னதமான தலைவருடன் பணி புரிந்தது என் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவம்.
“ மோடி அவர்களின் தேர்தல் வெற்றி, இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அதை தொடர்ந்து நடந்த மாற்றங்கள் என பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க உண்மைகளை உள்ளடக்கியுள்ளதால் ' தி மோடி எஃபெக்ட்' புத்தகம் சர்வதேச அரங்கில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இத்தகையை புத்தகம் கண்டிப்பாக பிரதமர் மோடி அவர்களின் நூலகத்தில் ஒரு நீங்கா இடம் பிடிக்கும். இப்புத்தகத்தில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” தன் பிரத்தியேகமான நீண்ட தலை முடியை சரி செய்தவாறே கூறினார் ஒளிப்பதிவாளர் UK செந்தில் குமார்.