மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
டாம் க்ரூஸ் நடிப்பில் கிரிஸ் மெக்குவாரி இயக்கியுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு படம் வித்தியாசமான சாகசங்களை மேற்கொள்ளும் டாம் க்ரூஸ் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation) திரைப்படத்தில் கார், பைக், விமானம் என பல சாகசங்களை செய்துள்ளார். இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் மிஷன் 'இம்பாசிபிள்:முரட்டு தேசம்' என்று தமிழில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கிரிஸ் மெக்குவாரி மிஷன் இம்பாசிபிள்-5 படத்தில் டாம் க்ரூஸின் சாகசங்களைப் பற்றி கூறும்பொழுது “மிஷன் இம்பாசிபிள் தொடரின் முந்தைய பாகங்கள் வெவ்வேறு விதமான ஆச்சர்யம் ஊட்டும் சாகசங்களை காட்சியாய் கொண்டு இருந்தது. கதாநாயகன் க்ரூஸ் நடித்திருக்கும் ஈத்தன் ஹன்ட் எதற்கும் துணிந்தவன் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் A400 விமானத்தில் தொங்கும் காட்சி ரசிகர்களை கண்டிப்பாக உறைய வைக்கும். இருப்பினும் டாம் க்ரூஸ் யாரும் தன்னை எளிதில் மதிப்பிட விடமாட்டார். மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' படத்தில் எல்லா வற்றையும் கடந்து தன் மூச்சை அடக்கி கொண்டு நீருக்கு அடியில் பல மணி துளிகள் நடித்துள்ளார்.” எனக் கூறினார்.
“நான் ஆழ் கடலில் நீந்தி உள்ளேன். இவ்வாறு மூச்சை அடக்கி அடக்கி கொண்டு 200 அடி ஆழத்தில் நடித்தது இல்லை. நீருக்கு அடியில் இப்படி நடிப்பது சற்று கடினமாகாவே இருந்தது. எனினும் எனது தீவிர பயிற்சி இத்தகைய காட்சியில் நடிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. மற்ற கடினமான காட்சிகளைக் காட்டிலும் இக்காட்சியில் நடித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனது உடலை பற்றி நிறைய விஷயங்களை கற்று எனது பயிற்சி கற்று தந்தது” என டாம் க்ரூஸ் கூறினார்.