மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
விஷால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கியுள்ள 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீடு ஆக., 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட பிரமுகர்கள் உட்பல விஷாலின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நண்பர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால், இந்த விஷாவுக்கு ஆர்யாவை வரவேண்டாமென விஷால் கூறியிருக்கிறார்.
இதற்கு முன் விஷால் நடித்து வெளிவந்த 'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பொங்கலுக்கு பெரிய படங்களுக்கு மத்தியில் 'ஆம்பள' வருவது பற்றி விஷாலிடம் கேட்ட போது 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' என விஷால் கூறியதாக ஆர்யா மேடையில் பேசினார். அது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை மனதில் வைத்துத்தான் விஷால் தற்போது ஆர்யாவை வரவேண்டாமென சொல்லியிருக்கிறார். “ஆர்யா தயவு செய்து 'பாயும் புலி' இசை வெளியீட்டிற்கு வந்துவிடாதே. போன முறை நீ தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். அதனால் இந்த முறை வராதே” என டிவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ஆர்யா பதிலளிக்கையில், “இந்த முறை நான் கண்டிப்பாக சிறப்பாக பேசுவேன், அம்மா சத்தியமாக நம்பு மச்சான்,” எனத் தெரிவித்துள்ளார்.