மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் கைதேர்ந்தவர் டி.இமான். பேசத் தெரிந்த நடிகர்களை பாட வைத்துவிடலாம் என்பது அவர் நம்பிக்கை. இவரைப்போலவே இப்போது எல்லா இசை அமைப்பாளர்களும் கிளம்பிவிட பவர் ஸ்டார் முதல் நான் கடவுள் ராஜேந்திரன் வரை பாடி படுத்தியெடுக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் அஜீத்தையும் பாட வைப்பேன் என்கிறார் இமான்.
அவர் கூறியிருப்பதாவது: திரைப்பட நட்சத்திரங்களை பாட வைப்பது அது படத்தின் புரமோசனுக்கு உதவுகிறது என்பது உண்மைதான். ஆனால் நான் பாட வைப்பதன் நோக்கம் அதுவல்ல. அந்தக் காலத்தில் நடித்தவர்களே பாடியதால் அந்த கேரக்டருக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. பேசும் குரலும், பாடும் குரலும் ஒன்றாக இருந்தால் கேரக்டருக்கு அது பிளஸ்சாக இருக்கும். அதனால்தான் பாட வைக்கிறேன். எனது அடுத்த இலக்கு அஜீத் சாரை பாட வைப்பதுதான். அவர் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக அவரை பாட வைப்பேன். என்கிறார் இமான்.