மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தங்களது படங்களின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர்கள் மிகச்சிலரே. அதில் அதிரடி இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தவிர்த்துவிட்டு ஒரு பட்டியலை யாராலும் தயாரிக்கவே முடியாது. தாதாயிசம், ஹாரர் - ராம்கோபால் வர்மாவின் படங்கள் எப்போதுமே இந்த இரண்டு தளங்களுக்குள் தான் இருக்கும். அண்டர்வேர்ல்டு தாதாக்களை பற்றி இவர் எடுத்திருக்கும் படங்களை வைத்து ஒருவர் பி.எச்.டியே முடித்து விடலாம். குறிப்பாக மேக்கிங்கில் படம் பார்க்கும் ரசிகனை மிரட்டுவது வர்மாவின் ஸ்டைல்.
லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால் மும்பை அண்டர்வேர்ல்டு தாதாக்களை மட்டுமே வைத்து கதை பண்ணிக்கொண்டு இருந்த ராம்கோபால வர்மா, தற்போது பெங்களூரு அண்டர்வேர்ல்டிலும் கால் பதிக்க இருக்கிறார். முன்பு பெங்களூருவையே கலக்கிய தாத்தா முத்தப்பா ராயின் கதையைத்தான் அவர் படமாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே 'அப்பா' என்கிற டைட்டிலில் கதையையும் தயார் செய்து வைத்துவிட்டார் ராம்கோபால் வர்மா.
முத்தப்பா ராய் கேரக்டரில் சுதீப்பை நடிக்கவைக்க ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. அவரும் ஒகே சொல்லிவிட்டாராம்.. ரக்தசரித்ரா, ரான். பூங் ஆகிய படங்களில் வர்மாவும் சுதீப்பும் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ஒரு தயாரிப்பாளராக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் பங்கும் தற்போது சிவராஜ்குமாரை வைத்து 'கில்லிங் வீரப்பன்' படத்தை இயக்கிவரும் ராம்கோபால் வர்மா அடுத்ததாக இந்தப்படத்தை துவங்குவர் என்று தெரிகிறது.