சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
நிவின்பாலி, நஸ்ரியா நடித்த நேரம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். தற்போது இவர் பிரேமம் என்ற மலையாளப்படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதோடு, இணையதளத்தில் வெளிவந்து சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இணையதளத்தில் வெளியிட்டதே அல்போன்ஸ் புத்திரன்தான் என்ற குற்றச் சாட்டும் உண்டு.
இந்த நிலையில் அல்போன்ஸ் புத்ரன் சென்னை கல்லூரி மாணவி அலீனா மேரியை திருமணம் செய்ய இருக்கிறார். அலீனா கொச்சியைச் சேர்ந்த மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள். இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்கள் நிச்சயித்த திருமணம். வருகிற 17ந் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. 22ந் தேதி திருமணம் நடக்கிறது.