மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்கத்தில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் முன்னணி திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள், பாடகர், பாடகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
எம்.எஸ்.வியின் உருவப்படத்தை திறந்து வைத்து இளையராஜா உரையாற்றுகிறார். தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொதுச் செயலாளர் டொமினிக் சேவியர், பொருளாளர் வி.சேகர், அறக்கட்டளை தலைவர் பி.ஜி.வெங்கடேஷ், செயலாளர் சங்கரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். "மெல்லிசை மன்னருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தவும், அவரை கவுரவிக்கவும் திரையிசைக் கலைஞர்கள் தவறாது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.