மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
வில் வித்தையில் நடிகை அனன்யா தீவிர காட்டி வருவதுபோல், நடிகை இனியா கூட பேட் மின்ட்டன் வீராங்கனை என்பது பலர் அறிந்திராத விஷயம். பள்ளி, கல்லூரி காலங்களிலேயே நடைபெற்ற போட்டிகளில் தவறாது கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியிருக்கிறார் இனியா. சினிமாவுக்கு வந்தபின் தவிர்க்க முடியாமல் அதிலிருந்து விலகியிருந்தாலும் கூட, உடற்பயிற்சியின் ஒரு பகுதியாகவும், நண்பர்களுடனும் அவ்வபோது பேட்மிண்ட்டன் விளையாட தவறுவதில்லையாம் இனியா.
இப்போது லேட்டஸ்ட் தகவலாக கனடாவில் உள்ள டொரண்டடோவில் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் பேட்மிண்ட்டன் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் மலையால சினிமாவில் இருந்து இனியா, விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்ட சிலரும், கோலிவுட்டில் இருந்து ஜெயம் ரவி, பரத்,கிருஷ்ணா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கனடாவில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக கடந்த ஒன்றரை மாதமாக பயிற்சி எடுத்துவருகிறாராம் இனியா.