மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஆறேழு வருடங்களுக்கு முன் ரஜினி-பசுபதி நடிப்பில் 'குசேலன்' படம் வெளியானது இல்லையா..? ரஜினியே மலையாளத்தில் இருந்து விரும்பி வாங்கி தமிழில் நடித்த படம் அது.. காரணம் ரஜினியின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய கதை அது. 'கத பறயும்போல்' என மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் கூட்டணியில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, பார்த்தவர் அனைவரின் கண்களையும் க்ளைமாக்ஸில் குளமாக்கிய அந்தபடத்தின் இயக்குனர் தான் மோகனன். அதன்பின் மாணிக்க கல்லு, 916 ஆகிய படங்களை இயக்கிய அவர் தற்போது இயக்கியுள்ள படம் தான் 'மை காட்'
ஒரு பள்ளி மாணவனின் வாக்கையில் எதிராபாராது நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஹனிரோஸ் அவரது மனைவியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹனிரோசுக்கு டாக்டர் வேடம். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திடமிட்டுள்ளார்களாம். இதில் என்ன பியூட்டி என்றால் இந்த வாரம் தான் சுரேஷ்கோபி நடித்துள்ள 'ருத்ர சிம்ஹாசனம்' படம் வெளியாகியுள்ள நிலையில், எப்படி அவரது அடுத்த படத்தையும் ஒருவார இடைவெளியில் உடனே ரிலஸ் செய்கிறார்கள் என்பதுதான்.