மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகில் விஜய்க்கும், விஷாலுக்கும் இடையே எப்போதும் ஒரு போட்டி இருப்பதாக ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. விஷால் நடிக்கும் படங்களைக் கூர்ந்து கவனித்தால் அவை விஜய்க்கும் பொருத்தமான படங்கள் போலவே இருக்கும். ரஜினிக்குப் பிறகு ஆக்ஷன் படங்களில் நடித்து அதிகமாக பெயர் வாங்கியிருப்பது விஜய்தான். அவருக்கு அடுத்து தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருபவர் விஷால்தான்.
விஜய் நடிக்கும் படத்திற்கு 'புலி' என்று பெயர் அறிவித்த சில நாட்கள் கழித்து விஷால் நடிக்கும் புதிய படத்திற்கும் 'பாயும் புலி' என்று பெயரிட்டார்கள். அப்போதே ஏட்டிக்குப் போட்டியாக விஷாலும் வேண்டுமென்றே பெயர் வைக்கிறார் என்றும் பேசினார்கள். அடுத்து இரண்டு படங்களின் இசை வெளியீடும் ஒரே நாளில் நடக்கப் போவதால் அறிவிப்பு வெளிவந்தது. அந்த விதத்தில் 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீடு நாளை காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற உள்ளது.
'புலி' படத்தின் இசை வெளியீடு மாலை 6 மணி அளவில் சென்னையை அடுத்துள்ள மகாபாலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. இரண்டு விழாக்களிலும் முக்கிய திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இந்த புலி ஆடியோ வெளியீட்டு விழாவில் ஸ்ருதி, ஹன்சிகா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. மேலும் நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட்டிலிருந்து ஒரு முன்னணி பிரபலம் ஒருவரையும் அழைத்து வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பாயும் புலி' செப்டம்பர் 4ம் தேதியும், 'புலி' செப்டம்பர் 7ம் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.