ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்திலான படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், அந்த படம் குறித்த தகவல் தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது வந்துள்ள தகவல், அட்டக்கத்தி தினேசும், இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதே.....
லிங்கா படத்தின் தோல்வியை தொடர்ந்து, வித்தியாசமான கதையில் நடித்தால் மட்டுமே இனி தனக்கு எதிர்காலம் என்பதை உணர்ந்த ரஜினி, இளம் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டார். கதை தேடலில் தீவிரமாக இருந்தபோது, அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் தொடர்வெற்றியை அறிந்த ரஜினி, அதன் இயக்குநர் பா.ரஞ்சித் கூறிய கதையை கேட்டார். படத்தின் கதை, ரஜினிக்கு பிடித்துபோகவே, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக்கலைஞர்கள் இடம்பெற வேண்டும் என்ற மரபையும், இயக்குநர் ரஞ்சித் உடைத்துள்ளார். தனது இயக்கத்திலான புதிய படத்திற்கு, தனது நண்பரும், முந்தைய படங்களின் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணனுக்கே, இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தனது படங்கள் வெற்றி பெற்றதற்கே, தனது குழுவில் உள்ள கலைஞர்களே காரணம் என்று முழுமையாக நம்புவற்கு சந்தோஷ் நாராயணனே சாட்சியாக இருந்தநிலையில், அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில், தனது முதல் படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷை, தனது புதுப்படத்திலும் நடிக்க வைக்க உள்ளார். இந்த தகவலை, இயக்குநர் ரஞ்சித்தே உறுதிப்படுத்தியுள்ளார்.
ராதிகா ஆப்தே படத்தின் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் மற்றும் படத்திற்கு "காளி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கையில், இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்க உள்ளார் என்று உறுதிப்பபடுத்தப்பட்ட தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது......