ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தமிழில் 'அலை, யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தற்போது இயக்கி வரும் படம் '24'. இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சமந்தா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது படத்தில் இன்னொரு கதாநாயகியாக நித்யா மேனன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேடத்திற்கு சமந்தாவும் மற்றொரு வேடத்திற்கு நித்யா மேனனும் ஜோடி என்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு தமிழில் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள நித்யா மேனனுக்கு சூர்யாவுடன் நடிப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
சமந்தாவும், நித்யா மேனனும் இதற்கு முன் 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்குப் படத்தில் நாயகிகளாக ஒரே படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழில் தற்போது ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.