ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
பொதுவாக ஹாலிவுட்டில் பீரியட் படங்கள், ஆதிவாசிகளின் படங்கள் எடுக்கும்போது ஆதிவாசிகளின் மொழியாக அவர்களே ஏதாவது ஒரு புதிய மொழியை உருவாக்கிக் கொள்வார்கள். குறிப்பாக லார்ட் ஆஃப்தி ரிங்ஸ், அபோகலிப்டோ படங்களில் ஆதிவாசிகள் படம் முழுக்க பேசிக்கொள்கிற மொழி கற்பனையாக உருவாக்கப்பட்ட மொழி.
அதேபோன்று இந்திய சினிமாவில் முதன் முறையாக உருவாக்கப்பட்டது கிளிக்கி மொழி, பாகுபலி படத்தில் காளகேயர்கள் பேசுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி. இந்த மொழியில் 750 சொற்களை உருவாக்கி அதற்கு பொருளும் உருவாக்கி இருக்கிறார் மதன் கார்க்கி. இந்த மொழி பேசுவதற்கு கம்ப்யூட்டர் மவுசை கிளிக் பண்ணுகிற மாதிரி சிம்பிளாக இருப்பதால் கிளிக் என்று பெயர் வைத்தார். அது ஆங்கில வார்த்தை என்பதால் கிளிக்கி என்று மாற்றிவிட்டார்.
இந்த மொழியில் வசனம் எழுதித்தான் அதனை காளகேயர்களின் தலைவராக நடித்த பிரபாகர் மனப்பாடம் செய்து பேசி நடித்தார். தற்போது இந்த மொழியை கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் ரகசியம் பேசிக் கொள்ள பயன்படுத்துகிறார்களாம். பாகுபலியின் இரண்டாம் பாகத்திலும் காளகேயர்கள் வருகிறார்கள். கிளிக்கி மொழியும் வருகிறது. இரண்டாம் பாகம் வந்த பிறகு மேலும் பல வார்த்தைகளை சேர்த்து எளிமையான இலக்கணம் உருவாக்கி இணைய தளத்தின் மூலம் இந்த மொழியை விரும்புகிறவர்களுக்கு கற்றுக்கொடுக்க இருக்கிறார் மதன் கார்க்கி.