ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். குத்துப்பாட்டு நடனங்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சில நேரங்களில் அவரே ஆடி கலக்குவார். ஸ்ரீதர் தற்போது போக்கிரி மன்னன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். ஸ்பூர்த்தி என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சிங்கம்புலி, மயில்சாமி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ரமேஷ் ரெட்டி தயாரித்து, வில்லனாக நடித்துள்ளார். சினிடெக் சூரி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்திரவர்மன் இசை அமைத்துள்ளார், ராகவ் மகேஷ் இயக்கி உள்ளார்.
ஹீரோவாக நடிப்பது பற்றி ஸ்ரீதர் கூறியதாவது: எங்க அப்பா மணி ஒரு நாடக நடிகர். அவர் நடிக்கிற நாடகங்களில் என்னை நடிக்க ஆட வைப்பார். அப்போதிருந்து ஆடி வருகிறேன். இதுவரை 300 பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். அதில் 50 பாடல்களுக்கு நானே ஆடியிருக்கிறேன். நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இதற்காக நான் முயற்சியும் எடுக்கவில்லை.
இந்தப் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடன அமைக்க கேட்டுத்தான் என்னிடம் வந்தார்கள். புதுமுக ஹீரோ தேடுவதாக சொன்னார்கள். நானும் நடனம் இயக்கி தருவதாக ஒப்புக் கொண்டேன். திடீரென்று நீங்களே ஹீரோவாக நடியுங்கள். முரட்டுத் தனமாக வில்லேஜ் கேரக்டர். சரியா இருப்பீர்கள் என்றார்கள். கதையை கேட்டதும் நடிக்க ஆசை வந்து விட்டது ஒப்புக் கொண்டு நடித்தேன். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் இல்லை படம் இயக்கத்தான் ஆர்வமாக இருக்கிறேன். நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். அவற்றை இயக்குவேன். இந்தப் படத்தில் மக்கள் என்னையும் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் தொடர்ந்து நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார்.