ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தமிழ் சினிமாவில் அதிக படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகூட சொல்லிவிடும் அர்ஜுன் என்று. அவர் சமீபத்தில் நடித்த வனயுத்தம், ஜெய்ஹிந்த் 2 ஆகியவற்றிலும் போலீஸ் அதிகாரிதான் நடித்தார். அஜித்துடன் நடித்த மங்காத்தாவிலும் போலீஸ் அதிகாரிதான். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரு மெல்லிய கோடு படத்திலும் போலீஸ் அதிகாரிதான்.
இந்த நிலையில் தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, மலையாளத்தில் பெருச்சாழி படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. கப்பல் படத்தை தயாரித்த ஐ ஸ்டூடியோ சார்பில் கதன், உமா சங்கர் தயாரிக்கிறார்கள்.
"பெருச்சாழி படத்தில் நல்ல அரசியல்வாதிகள், போலி அரசியல்வாதிகளை பற்றிச் சொன்னேன். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் காட்ட இருக்கிறேன். காவல்துறையின் உள்ளே நடக்கும் அரசியலை சொல்ல இருக்கிறேன். நடுத்தர வயது போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு அர்ஜுன் பொருத்தமானவர் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். 50 சதவிகித படப்பிடிப்பு சென்னையிலும் 50 சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது" என்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்