ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அதிரடி கதைக் களம் கொண்ட படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அகில் டோலிவுட்டில் அதிரடி நாயகனாக அறியப்படுவார் என தகவல் பரவியது. முதல் படத்திலேயே அதிரடி நாயகனாக மட்டுமல்லாது காதல் நாயகனாகவும் தன்னை முன்னிறுத்த அகில் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார். இயக்குநர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சோனல் நடிக்கின்றார். அகில் சோனல் நடிக்கும் காதல் காட்சியை இன்னும் சுவாரசியமாக்க இயக்குநர் முத்தக் காட்சி வைக்கலாம் என்று கேட்டுக் கொண்டாராம். அகிலும் சோனலும் மறுப்பேதும் சொல்லாமல் முத்தக்காட்சியில் நடித்துள்ளனர். முதன் முறையாக முத்தக் காட்சியில் நடித்ததால் அகில் தயக்கத்துடனே அக்காட்சியில் நடித்ததாக படப்படிப்பு தள தகவல்கள் கூறுகின்றன. மேலும் இக்காட்சி கொண்ட புகைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.