ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் "லோபர்" படத்தில் முதலில் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட நடிகர் நிதின் திடீரென அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது நடிகர் வருண் தேஜ் லோபர் படத்தில் நாயகனாக நடிக்கின்றார். இந்நிலையில் S/O சத்யமூர்த்தி படத்திற்கு பின்னர் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் நிதின் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இப்படத்தில் நிதினுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. S/O சத்யமூர்த்தி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா ஹரிக்கா அன்ட் ஹாசினி கிரியேசன்ஸ் சார்பில் இப்படத்தையும் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நடிகை சமந்தா இப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த அட்டரின்டிகி டாரிடி, S/O சத்யமூர்த்தி போன்ற படங்களில் நடித்த சமந்தா மூன்றாவது முறையாக அவரது படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.