ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா "கிக் 2" படத்தில் நடித்து முடித்து தற்போது "பெங்கால் டைகர்" படத்தில் நடித்து வருகின்றார். மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட "கிக் 2" படத்தின் திரையிடும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் நடிகர் கல்யாண் ராம் தயாரித்துள்ள கிக் 2 படத்தை ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கியுள்ள கிக் 2 படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இவர்களுடன் பிரம்மானந்தம், ரவி கிஷான், ராஜ்பால் யாதவ், சஞ்சய் மிஸ்ரா , நடிகை கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். டோலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கிக் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி தேஜா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.