சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் படம் என்றதும், அட.. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் உருவாவது ஒரு பெரிய விஷயமா..? மலையாளத்தில் எடுத்து மற்ற மொழிகளில் டப்பிங் பண்ணிவிடுவார்கள் என சாதாரணமாக நினைத்தீர்கள் என்றால் உங்கள் கணிப்பு நிச்சயம் தவறு. இது சங்கதியே வேறு.. பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாக இருக்கும் மலையாளம், அசரி, சைனீஸ், ரஷ்யன், டர்கிஷ் என ஐந்து மொழிகளுக்கு செல்கிறது இந்தப்படம். அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் ரஷ்யாவின் அண்டை நாடான அசர்பைஜான் என்கிற நாட்டில் தான் நடைபெற இருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் நான்கு மலையாள நடிகர்கள் மட்டுமே இடம்பெறுகிறார்களாம். மோகன்லால் தவிர, அவரது மகளாக நடிக்க இருக்கும் அபர்ணா கோபிநாத், பிரதாப் போத்தன் மற்றும் சாய்குமார் ஆகியோர் தான் இந்த நால்வர். இவர்களை தவிர படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் 21 பேர் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த நடிகர்கள் தான். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப்படம் கேரள மற்றும் அசர்பைஜான் கூட்டு தயாரிப்பாக உருவாக இருக்கிறது.