ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூர்ணா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானார். விஜய்யால் சின்ன அசின் என்று புகழப்பட்டவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கொடைக்கானல், கந்த கோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அர்ஜுனன் காதலி என்ற படம் வெளிவரவில்லை. தற்போது அப்பாடக்கர் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அடுத்து மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி படத்தில் நடிகிறார்.
மிஷ்கின் மனைவியாவும், 2 குழந்தைகளுக்கு தாயாகவும், 7 மாத கர்ப்பிணியாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். பல நடிகைகள் மறுத்த இந்த கேரக்டரில் பூர்ணா துணிச்சலுடன் நடிக்க சம்மதித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விருதுகளும், இன்னொரு புதிய இமேஜும் கிடைக்கும் என்று நம்புகிறார் பூர்ணா.