ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் ''விசாரணை''. அவரின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் வொண்டர் ஃபார் பிலிம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர். இதனை சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை தழுவி எடுத்துள்ளார் வெற்றிமாறன். குற்றமற்ற ஒருவன் போலீசார் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்று கொடூரமான விசாரணை நடத்துகிற கதை. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மணிநேரமே ஓடும் சிறப்பு திரைப்படம் இது.
காக்கா முட்டை பாணியிலான யதார்த்த சினிமா இது. சமீபத்தில் முதல் காப்பி தயாரானது.
தற்போது தனது விருது பயணத்தை தொடங்கி உள்ளது. வெனிஸ் நகரில் நடைபெறும் 72வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட விசாரணை தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது. இந்த படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவதே கடினம். அதுவும் விசாரணை போட்டிபிரிவில் தேர்வாகி உள்ளது. அப்படி தேர்வான முதல் தமிழ் படம் இதுதான். செப்படம்பரில் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.