ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மறைந்த மாமனிதர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. கமலஹாசன் இரங்கற்பா எழுதி நேற்று வெளியிட்டார். ஓவியரும் இயக்குனருமான ஸ்ரீதர் ஒவியம் வெளியிட்டார்.
இதற்கு இடையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் அப்துல் கலாமின் நம்பிக்கை வரிகளை போட்டு "வா நண்பா வா... கனவு காணலாம்" என்று பாடலை பாடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். ஜோதி பாசு பாடல்களை எழுதியுள்ளார். 3 மணிநேரத்தில் எழுதி, இசை அமைத்து, பாடிய இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்பணித்துள்ளார் அசோக்.
முருகா படத்தில் அறிமுகமான அசோக் பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, உலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார், கன்னிகாபுரம் சந்திப்பு, திகில், ப்ரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படங்களில் நடித்து வருகிறார்.