ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் வந்தா மல. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் என்ற புதுமுகங்களுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார். வட சென்னையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பெரிய குற்றத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிற கதை. நாட்டையே நாசமாக்கும் ஒரு கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிற கதை. "திருடு பொய்சொல்லு நாட்டை காப்பாத்து" என்பதுதான் படத்தோட மெசேஜ்.
வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் கடைசி இணைப்பாக பராசக்தி படத்தில் சிவாஜி பாடும் "தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம் காசு முன் செல்லாதடி..." என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. சரிகம நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமம் பெற்று அதனை ரீமிக்ஸ் செய்து சேர்த்துள்ளர். இந்த பாடலை கருணாநிதி எழுதியிருந்தார்.
"பராசக்தி காலத்திலும் பணம்தான் பிரதானமாக இருந்திருக்கிது, இந்தக் காலத்திலும் பணம்தான் எல்லாவற்றுக்கும் முன் நிற்கிறது. இதற்காக பாரசக்தி பாடலை அதன் மெருகு குன்றாமல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் இகோர்.