ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆர்வியார் என்ற புதுமுகம் இயக்கி உள்ள படம் அஞ்சுக்கு ஒண்ணு. புதுமுங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆர்.சாகித்யா இசை அமைத்திருக்கிறார், அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு சென்றது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரி போடச் சொல்லி யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஆர்வியார் கூறியதாவது: இப்படம் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரியும் 5 இளைஞர்களுக்கும், ஒரு பெண்ணுக்குமான கதை, அவர்களின் வாழ்க்கையை மிக மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளேன். ஆனால் தணிக்கை குழுவினர் நிறைய கட் கொடுத்தார்கள். இது வருத்தமாக உள்ளது.
உதாரணமாக கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் விலைமாதுவிடம் என் கதைநாயகர்கள் இருந்தார்கள் எனும் காட்சிக்கு பெண்ணை கட்டிபிடிக்கும் காட்சி கூட காட்சி வைக்காமல் ஆணுறை சிதறி கிடக்குமாறு மட்டும் காட்சி வைத்தேன் இதற்கெல்லாம் கட் கொடுக்கிறார்கள். நாயகியின் தொப்புள் பகுதிக்கு அருகில் நாயகன் கன்னத்தை கொண்டு செல்லும் காட்சிக்கும் கட் கொடுக்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் கட் கொடுத்தால் எப்படிதான் படம் எடுப்பது. நிச்சயமாக ஒரு இடத்திலும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இல்லை. இத்திரைப்படம் மக்கள் அனைவராலும் ரசிக்கும் வண்ணம் அமையும். என்கிறார் ஆர்வியார்.