ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், மோகன்லால். காஜல் அகர்வால் நடித்த ஜில்லா படம் கடந்த வாரம் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது. பொதுவாக தமிழிலிருந்து தெலுங்குக்கு செல்லும் டப்பிங் படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் விஜய்யின் ஜில்லா ஒரு வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல ஆந்திராவில் நேரடி திரைப்படத்திற்கு எந்தளவுக்கு விளம்பரம் செய்வார்களோ, அந்தளவுக்கு விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் வெற்றி சந்திப்பு (சக்சஸ் மீட்) கொண்டாடப்பட்டது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, தெலுங்கு விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.டி.நேசன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான விஜய்யும், கேரளாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லாலும் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும், கேரளாவிலும் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் ஆந்திராவிலும் பெரிய ஓப்பனிங் மற்றும் வசூலை உருவாக்கியிருக்கிறது. முதலில் 350 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களிலேயே மேலும் 50 தியேட்டர்களில் வெளியானதை குறிப்பிட்டாக வேண்டும். பாகுபலி வெளிவந்து மக்கள் அதற்கு பேராதரவு கொடுத்து வரும் இந்த நேரத்திலும், விஜய் மற்றும் மோகன்லாலின் ஜில்லா படத்திற்கும் இத்தனை திரையரங்குகள் ஒதுக்கி ரசிகர்களை மகிழ்வித்த தியேட்டர் அதிபர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.