அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, தாமரை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி மாதிரி ஒரு சிலரே இருக்கிறார்கள். தற்போது பார்வதி என்ற பாடலாசிரியை வேகமாக வளர்ந்து வருகிறார். வல்லினம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான பார்வதி, ஜில்லா படத்தில் எழுதிய "வெரசா போகையிலே... புதுசா போறவளே..." என்ற பாடல் மூலமும், அமராகாவியம் படத்தில் இடம்பெற்ற "ஏதேதோ எண்ணம் வந்து..." பாடல் மூலமும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் "கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்..." பாடல் மூலமும் புகழ் பெற்றார். தற்போது களம், கொளஞ்சி, உள்பட 8 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.
"பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களிலும் நடித்தும் டப்பிங் குரல் கொடுத்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பதில்லை. தூர்தர்ஷன் பொதிகையில் ஐந்து வருடங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். .
படிக்கும் போதே என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இப்படிக்கு நானும் நட்பும் வெளியிட்டேன். 2010-இல் என் இரண்டாம் கவிதைத் தொகுப்பான இது வேறு மழை யை வெளியிட்டேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சித்தேன். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நல்ல பாடல்கள் எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்கிறார் பார்வதி.