ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் புலி படத்தை சிம்புதேவன் இயக்கி உள்ளார், பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார், நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 2ந் தேதி வெளியிடப்படுகிறது.
இதையொட்டி சிம்பு தேவன் அளித்த பேட்டியில் கூறியதாவது: புலி பேண்டசி எண்டர்டெயின்மெண்ட் படம். விஜய் படத்துக்கே உரித்தான அத்தனை அம்சங்களுடன் வெளிவரும் படம். ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரமாண்டம், குழந்தைகளை கவரும் அம்சம், ரொமான்ஸ் எல்லாமே இருக்கு. சரித்திரகால பின்னணி கதையும் இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த பாகுபலி அதன் கடின உழைப்புக்காகவும், பிரமாண்டத்துக்காகவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு இயக்குராக எனக்கு மகிழ்ச்சி. புலியில் சரித்திர பின்னணி இருந்தாலும் பாகுபலிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதன் கதை பின்னணியும், காட்சி அமைப்பும் முற்றிலும் வித்தியாசமானது என்றார்.
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: நான் இந்த இடத்தில் நிற்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. விஜய் என்னை நிற்க வைத்திருக்கிறார். அவர் எனக்கு தந்த உயரம் பெரியது. ஒரு சாதரணமானவரை தயாரிப்பாளராக்கி இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புள் 147 நாட்கள் நடந்தது. ஒரு நாள்கூட ஒரு சின்ன விஷயத்திற்காககூட படப்பிடிப்பு நிற்க வில்லை. சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்துடன் (பாகுபலி) புலியை ஒப்பிட்டு நிறைய கமெண்டுகள் வருகிறது. தயவு செய்து இரண்டு படத்தையும் ஒப்பிட வேண்டாம். அந்த படமும் கதையும் வேறு, இந்த படமும், கதையும் வேறு என்றார்.