ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் சீசன் மலையாள சினிமாவிலும் தலையெடுக்க துவங்கியுள்ளது. அப்படித்தானே 'ஷட்டர்' என்கிற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் ஜாய் மேத்யூவை, அடுத்து படம் இயக்கவிடாமல் பிசியான குணச்சித்திர நடிகராக மாற்றிவைத்து விட்டார்கள்.. அதேபோல பீக்கில் இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தையும் சில படங்களில் தலைகாட்ட வைத்தார்கள்.. ஆனாலும் உஷாராக அவர் இப்போது டைரக்சனில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.. இந்த சூழலில் தற்போது பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துவரும் 'அனார்கலி' படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதுநாள் வரை கதாசிரியராக வலம் வந்த சாச்சி, இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
இந்தப்படத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் சில கதாபாத்திரங்களில் நடிக்க புதுமுகங்களாக ஐந்துபேர் வேண்டும் என தேடிய இயக்குனர் சாச்சி, கடைசியில் ஐந்து இயக்குனர்களை இழுத்துவந்து நடிக்க வைத்திருக்கிறார். பிருத்விராஜ் நடித்த 'இவிடே' படத்தை இயக்கிய ஷியாம் பிரசாத், மற்றும் வி.கே.பிரகாஷ், மதுபால் ஆகிய மூவரையும் இதற்கு முன்னரே நடித்து வரும் இயக்குனர்களான ரஞ்சி பணிக்கர் மற்றும் மேஜர் ரவி ஆகிய ஐவரையும் இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இவர்களுடன் பிஜுமேனன் மற்றும் கதாநாயகியாக மியா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் பிருத்விராஜும் பிஜுமேனனும் கடற்படை அதிகாரிகளாக நடித்துள்ளார்கள்.