அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
'புலி' படத்தில் இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த கேரக்டரில் நடித்து முடிப்பதற்குள், படாதபாடு பட்டு விட்டாராம் அவர். தினமும், 'மேக் அப்'பிற்காக மட்டும், மூன்று மணி நேரம் அவருக்கு செலவானதாம். இது, மட்டுமல்லாமல், பட்டு புடவை, கிலோ கணக்கில் தங்க நகைகள் ஆகியவற்றையும் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து, அவர் கூறுகையில், 'என் திரையுலக வாழ்க்கையில், இதுபோன்ற கேரக்டர் இனி எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். நான் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும், படம் வெளியானதும் பலன் கிடைத்து விடும்' என, கூறியுள்ளார்.