அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாணவ சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தியவர். . அவரது ஆத்மா சாந்தியடையட்டும் உச்சநிலைக்கு சென்ற போதும் பணிவு, எளிமையாக வாழ்ந்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம் என கூறியுள்ளார்.