அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அப்துல் கலாமின் மறைவையொட்டி நடிகர் கமல்ஹாசன் ஓர் இரங்கல் மடல் ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....
கலாம்களும் கமால்களும்
கமல்களும்
இலாதுபோகும்
நாள்வரும்
இருந்தபோது
செய்தவை
அனைத்துமே
கணிப்பது
ஹெவன் என்று
ஒருவனும்
பரம் என்று ஒருவனும்
ஜன்னத்தென்று ஒருவனும்
மாறி மாறிச் சொல்லினும்
இகத்திலேயவன்
நடந்த பாதையே
புகழ் பெறும்
நிரந்தரம் தேடுகின்ற
செருக்கணிந்த
மானுடர்
தொண்டருக்கடிப்பொடி
அம்மெய்யுணர்ந்த நாளிது
புகழைத் தலையிலேந்திடாது
பாதரட்சையாக்கிய
கலாம் சாஹெப்
என்பவர்க்கு
சலாம் கூறும் நாளிது
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.