அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
"தலைவா" பட வெளியீடு விவகாரத்தில், நடிகர் விஜய் பெரும் இடர்பாடுகளை சந்தி்ந்திருந்த வேளையில், நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் சிம்பு முதல்ஆளாக வந்து ஆதரவுக்கரம் நீ்ட்டியிருந்த நிலையில், அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, இக்கட்டில் உள்ள நடிகர் சிம்புவிற்கு உதவும் வகையில் "வாலு" படத்தின் ரிலீசிற்கு, நடிகர் விஜய் நிதியுதவி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு, ஹன்சிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் விஜய்சந்தர் இயக்கியுள்ள படம் "வாலு". இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும், பொருளாதாரப் பிரச்னையின் காரணமாக, படம் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி, 3 முறைக்கு மேல் அறிவிக்கப்பட்டு, பின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த 17ம் தேதியே, "வாலு" படம் ரிலீசாவதாக இருந்தது. கோர்ட் நடவடிக்கைகளின் காரணமாக, படம் அன்றைய தினத்திலும் ரிலீஸ் ஆகவில்லை.
வாலு படம் தற்போது, ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியில் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, படத்தை, ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரிலீஸ் செய்வதற்கு ஏதுவாக, சிம்புவிற்கு, நடிகர் விஜய், நிதியுதவி செய்துள்ளார்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சினிமா விநியோகஸ்தர் கூறியதாவது, திரைத்துறையில் ஒருவர் இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அவருக்கு உதவி செய்ய நினைப்பவர் மிகக்குறைந்த அளவினரே.... அவ்வாறு இருக்கையில், சிம்புவின் பட ரிலீசிற்கு, விஜய் நிதியுதவி செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகர் விஜய், சிறு குழந்தையாக இருக்கும்போதே, டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக இருந்தார். தலைவா படத்தின் ரிலீஸ் நேரத்தில், இக்கட்டான நிலையில் விஜய் இருந்தபோது, அவருக்கு முதலில் ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் டி.ராஜேந்தரும் மற்றும் நடிகர் சிம்புவும் தான். தான் துன்பப்பட்ட வேளையில், தனக்கு பேரூதவியாக இருந்த டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவிற்கு தனது நன்றிக்கடனை செலுத்தும் வகையில், சிம்பு படம் வெளியாவதற்கு தேவையான நிதியுதவியை, நடிகர் விஜய் வழங்கியுள்ளதாக அந்த விநியோகஸ்தர் கூறினார்.