அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மக்களின் ஜனாதிபதி, ஏவுகணையின் நாயகன், மாணவர்களின் எழுச்சி நாயகன் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமணா படத்தில், ''ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து, அவனுக்காக அந்த குடும்பமே அழுதால் அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன்... ஆனால் ஒருவனுக்காக நாடே அழுகிறது என்றால்...'' என்று ஒரு வசனக்காட்சி வரும்... அந்தவசனக்காட்சி ஒரே ஒரு சொந்தக்காரர் என்றால் அப்துல் கலாம் மட்டும் தான். அவரின் மறைவுக்கு நாடே அழுகிறது.
கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் உட்பட பலர் விடுமுறை அளித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நாளை இரண்டு நேரம் காட்சிகளை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தி்ன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ''அப்துல் கலாம் அவர்களின் மறைவு பேரிழப்பு. நாளை(ஜூலை 30) அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்துள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.