அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
“இவன் பதவியே அப்பவோ இப்பவோன்னு ஆடிக்கிட்டு இருக்காம்.. இதுல எனக்கு இவன் அமைச்சர் பதவி வாங்கி தரானாம்” என அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் கிண்டலாக ஒரு வசனம் எழுதியிருப்பார். தற்போது சல்மான்கான் நிலை அப்படித்தான் மாறி வருகிறது.. இவரே ஆள் ஒருவரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து இப்போதுதான் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து உலாவுகிறார்.. சூழ்நிலை அறிந்து பேசாமல் அமைதியாக இருக்கவேண்டாமா..? மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளான யாகூ மேனனுக்கு ஆதரவாக இவர் ட்வீட்டரில் கருத்து சொல்லியிருக்கிறார்.
இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாவின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.. “நீதிமன்றமே விசாரித்து தண்டனை கொடுத்த குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் சல்மான்கான் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, தீவிரவாதிகளுக்கு இடையில் வசித்தால் தான் சந்தோஷமாக இருப்பார்கள் போல. சல்மான்கானின் பெற்றோர் 1947ல் அப்போதே பாகிஸ்தானுக்கு போகாமல் தவறு செய்துவிட்டனர். இப்போது அந்த தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக சல்மான்கான் பாகிஸ்தானுக்கு சென்று வசிக்கட்டும்” என கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து விமர்சனங்கள் அதிகரிக்கவே சல்மான்கான் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.