அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் |
மத்திய தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அமைச்சகம் சினிமாவில் பணிபுரியம் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் மருத்துவ சேவைக்காக கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இலவச மருத்துவமனை ஒன்றை அமைக்க இருக்கிறது. ஏற்கனவே இதே போன்ற மூன்று மருத்துவமனைகள் கோல்கட்டா, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டு தங்களது சேவையை தொடர்ந்து செய்து வருகின்றன. இப்போது அமையவுள்ள நான்காவது மருத்துவனை எல்லோரும் ஏகமனதாக ஒப்புக்கொள்ள, திருவனந்தபுரத்தில் அமைய இருக்கிறது.
இங்கே சினிமா தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான மருத்துவ சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாகவே அளிக்கப்படும். கொஞ்சம் பெரிய சிகிச்சைக்காக நோயாளிகள் பணம் செலுத்தியிருந்தாலும் கூட., இப்போது எப்படி கேஸ் மானியம் முதலில் பயனாளிகளிடம் பெறப்பட்டு மீண்டும் அவர்களுக்கே திருப்பித்தரப்படுகிறதோ, அதேபோல இதுவும் திருப்பித்தரப்பட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல, இந்த கலைஞர்களின் குழந்தைகளுக்கான ஸ்காலர்ஷிப் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் ஆகியவற்றையும் இந்த மருத்துவமனை செய்துதர இருக்கிறதாம்.